தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக வருவது ஐப்பசி மாதம். சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் பயணிக்க துவங்கும் மாதமாகும். புரட்டாசி மாதம் எப்படி பெருமாளுக்கு உரியதோ, அதே போல் ஐப்பசி மாதம் சிவனுக்கு உரியதாகும். ஐப்பசி மாத பெளர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படும். ஒரு அன்னாபிஷேக தரிசனம், கோடிக்கணக்கான லிங்கங்களை தரிசித்த பலனை தரக் கூடியதாகும். அதே போல் இந்த மாதத்தில் தான் தீபங்களின் பண்டிகையான தீபாவளியும், முருகனுக்குரிய விழாவான கந்தசஷ்டியும் நிகழும்.
அளவில்லாத சிறப்புகளுடன், ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் ஐப்பசி மாதத்தில் வேறு என்னென்ன விரதங்கள், விசேஷங்கள், சுபமுகூர்த்த நாட்கள் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதை இங்கு தெரிந்த கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் 2023 விசேஷ நாட்கள் :
அக்டோபர் 23 (ஐப்பசி 06 ) திங்கள் - சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
அக்டோபர் 24 (ஐப்பசி 07 ) செவ்வாய் - விஜயதசமி
அக்டோபர் 28 (ஐப்பசி 11 ) சனி - மஹா அன்னாபிஷேகம்
நவம்பர் 12 (ஐப்பசி 26 ) ஞாயிறு - தீபாவளி பண்டிகை
நவம்பர் 13 (ஐப்பசி 27) திங்கள் - கந்தசஷ்டி ஆரம்பம், கேதார கெளரி விரதம்
ஐப்பசி மாதம் 2023 விரத நாட்கள் :
ஐப்பசி 01 (அக்டோபர் 18) புதன் - சதுர்த்தி
ஐப்பசி 03 (அக்டோபர் 20) வெள்ளி - சஷ்டி
ஐப்பசி 05 (அக்டோபர் 22) ஞாயிறு - திருவோணம்
ஐப்பசி 08 (அக்டோபர் 25) புதன் - ஏகாதசி
ஐப்பசி 09 (அக்டோபர் 26) வியாழன் - பிரதோஷம்
ஐப்பசி 11 (அக்டோபர் 28) சனி - பெளர்ணமி
ஐப்பசி 13 (அக்டோபர் 30) திங்கள் - கிருத்திகை
ஐப்பசி 15 ( நவம்பர் 01) புதன் - சங்கடஹர சதுர்த்தி
ஐப்பசி 17 (நவம்பர் 03) வெள்ளி - சஷ்டி
ஐப்பசி 23 (நவம்பர் 09) வியாழன் - ஏகாதசி
ஐப்பசி 24 (நவம்பர் 10) வெள்ளி - பிரதோஷம்
ஐப்பசி 25 (நவம்பர் 11) சனி - சிவராத்திரி
ஐப்பசி 27 (நவம்பர் 13) திங்கள் - அமாவாசை
ஐப்பசி மாதம் 2023 சுபமுகூர்த்த நாட்கள் :
ஐப்பசி 01 (அக்டோபர் 18) புதன் - வளர்பிறை
ஐப்பசி 03 (அக்டோபர் 20) வெள்ளி - வளர்பிறை
ஐப்பசி 08 (அக்டோபர் 25) புதன் - வளர்பிறை
ஐப்பசி 10 (அக்டோபர் 27) வெள்ளி - வளர்பிறை
ஐப்பசி 15 (நவம்பர் 01) புதன் - தேய்பிறை
ஐப்பசி 24 (நவம்பர் 10 ) வெள்ளி - தேய்பிறை
ஐப்பசி 26 (நவம்பர் 12) ஞாயிறு - தேய்பிறை
ஐப்பசி 30 (நவம்பர் 16) வியாழன் - வளர்பிறை
Comments
Post a Comment